உடைவாள் சிதைப்பை

கட்டளைக் கலித்துறை

இயற்கைத் தருமோ கலப்பட தன்மை உணவையுமே
முயற்சியால் மாற்றிட மாந்தன் முனைந்து இவைகளையே
பயிற்சியால் மாற்றினான் செல்வம் பெறவே எவற்றையுமே
அயற்சி அடைவே இவையே அடிப்படை காரணமே (க)

பலவகை நாட்டின் உறவினால் எந்த பொருளையுமே
பலவகை ஈட்டலை செய்திட ஒவ்வா முறையினிலே
சிலவகைக் கேடுச் சுவைகளைக் கொஞ்சமாய் சேர்த்திட்டானே
குலத்தை அழித்திடும் துர்மிகு கேடினை ஆக்கினானே (உ)

உடலின் குருதியை நோயினால் மாற்றிட எண்ணினானே
கடலது உப்பில் கலப்படம் செய்ததால் நோய்க்காரணி
படர்ந்திடும் தன்மையை கண்டதால் ஆதியாய் கொண்டானதை
உடைவாள் சிதைப்பை விடவும் கொடுமையைச் செய்வித்தானே (ங)

உணவில் இதுபோல் கலப்படம் செய்திட ஓரிடத்தில்
உணவுக் கழகம் துவக்கி வகுத்தனர் கோட்பாட்டையே
பணத்தை பெருக்கிட செய்தனர் நல்லதாய் பாதையையும்
பிணத்தின் அளவை முதலென கொண்டே வியாபாரமே (ச)

உலக உணவுக் கழகம் எனவும் உருவாக்கியும்
உலக சுகாதா ரகழகம் என்ற அமைப்பையுமே
விலையை உருவாக் குகின்ற பணியைக் கவனித்திட
நிலையமும் வைத்தனர் செம்மை கலப்படம் செய்திடவே (ரு)
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (10-Feb-22, 10:47 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 25

மேலே