கரைகள் மீறலாமோ
கரைகள் மீறிய நதிகள்.
*********
பொழிந்திடும் பெருமழை புரண்டிடும் புதுவெள்ளம் //
வெடித்து வரண்ட வயல்களின் வேண்டுதல் //
அளவான வான்மழை அழகான விளைபொருள் //
அளவிலா மழையினால் ஆவது தீமையே//
மானுடர் வாழ்விலும் மாற்றங்கள் தேவையே //
மாற்றங்கள் எல்லைகள் மீறினால் தொல்லையே !
நதியிலே ஓடுநீர் கரைதாண்டக் கூடாதே //
கதியற்றுப் போகுமே கரைமீறின் நதியுமே //
அன்பிற்கும் வரம்புண்டு அன்புளோர் வாழவே //
யாவிற்கும் கரையொன்றுக் காவலாய் நிற்குமே !!
-யாதுமறியான்.