நானும் கம்பும்
நான் உறங்க முதலில் வந்ததும் ஒரு கம்புதான் (தூணி/தொட்டில்)
நான் ஓடி விளையாட நுங்கு வண்டியாக மாறியது கம்பு
என் எண்ணம் நேர்பட , வாத்தியார் எடுத்தது கம்பு (பிரம்பு)
என்னை தற்காத்துக்கொள்ள நான் எடுத்தது கம்பு (சிலம்பு)
நான் துணை தேடும் நேரத்தில் என் வீட்டின் முன் வந்தது கம்பு (பந்தக்கால்)
என் பெற்றோரின் இறுதி சடங்கில் வந்தது கம்பு (தீப்பந்தம்/கொல்லி)
என் வயதான காலத்தில் நானே நடக்க உதவியது கம்பு (ஊன்றுகோல்)
என் இறுதி சடங்கில் என் மேல் வைத்தார்கள் கம்பு (விறகு)
இறுதியில் நான் அடங்க மறுக்க வெட்டியான் எடுத்தான் ஒரு கம்பு.