தாளாய் எழுத பனைமட்டை

வெள்ளொத்தாழிசை
பனைமட்டைப் பாய்தரும் ஓலையால் தூங்க
விசிறியாய் மாறிடும் கோடையில் ஓலையும்
தாளாய் எழுத அது
அகம்வேய கூரைக்கு வாரையைத் தந்திடும்
பூவாய் மலரையில் கள்ளுந் தருமே
முதிர்ந்தால் விறகெனப் பூ
பூவது காயென மாறியே நுங்காய்
பழுத்தால் விதையென நட்டால் கிழங்காய்
விதையின் வளர்ந்தநீள் வேர்.
--- நன்னாடன்.