இயல்பானவைகள்

நனியாய் இருக்கும் பெரிய இறைவன்
தனியாய் தோன்றிய சிவனே அவன்தான்
பனியாய் தருவான் அருளை நிறைவாய்
கனிவாய் தொழுதே பிறவியை உய்வோம் (க)

மனமும் அறிவும் முரணினைக் கொண்டால்
அனலும் அலுப்பும் உடலினுள் பெருகும்
தினமும் களைப்பால் சோர்வை அடையும்
தனமும் உயர்வும் இடத்தை மாற்றும் (உ)

முயற்சி என்பதின் கரத்தைப் பற்றிடின்
பயற்சியை செய்திட முயற்சி செய்தால்
உயர்வு என்பது வாழ்வை உயர்த்தும்
அயர்வே இன்றி அழகாய் வாழலாம் (ங)

பலவகை பொருட்கள் உலகில் உண்டு
சிலவகை மட்டுமே உணவாய் உயிர்க்கு
நலந்தரும் வகையில் இறைவன் கொடுத்தான்
விலையை வைத்து மனிதன் விற்கிறான் (ச)

பூமியோ இருபத்து மூன்றரை கோணசாய்வில்
தாமதம் இன்றியே தன்னைச் சுழற்றியும்
ஊமையாய் யாவரும் செய்வதைப் பார்த்தே
தீமை செய்யும் மனிதரை காத்தும் (ரு)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Mar-22, 9:29 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 36

மேலே