வயலழகு வரப்பழகு

வயலழகு வரப்பழகு;
வளர்ந்த பசுமை நெல் நாத்தழகு;
ஊரழகு, உழவுழகு;
உழவன் தினவெடுத்த தோள் அழகு;
உலகுக்கு உணவு தரும்,
உழவன் உழைப்பழகு;

பச்சை நிறம் அழகு;
பாய்விரித்து படுத்துறங்கும் பசுமையழகு;
பசு மேயும் புள்வெளி அழகு;
பல் அழகு; பழம் அழகு; மழலைச் சொல் அழகு
பழந் தமிழழகு;

காடழகு; கழனி அழகு;
கண்கொள்ளாக்காட்சி அழகு;
ஊர் அழகு; உச்சி வானம் அழகு;
பிச்சி விழுந்த நீல்வெள்ளை வர்ண வானம் அழகு;
விண்ணழகு வேய்ந்த மேகக் கூறை அழகு;
விழுந்த பொழுதழகு;

தொட்டில் கட்டித் தொங்கும் தொடுவானமும் அழகு;
நீல் வண்ண நெடுவானில் உதித்த சூரிய உதயம் அழகு;
கோவில் சுமந்த வயல்வெளியில்,
தெய்வீகமும் அழகு

ஓங்கி வளர்ந்த பனை தென்னையழகு;
உச்சி மரத்தில் ஊசி இலையழகு;
ஒயிலாய் நடை நடந்து வரும் ஆற்றின் ஆடல் அழகு;
கரை தட்டி நுரைபூத்து வழிந்தோடும் புனலின் ஒயிலான ஓட்டம் ஒழகு.;
ஓடும் வாய்க்கால் அழகு;
வாய்க்கால் வரப்பில் வளர்ந்த மரம், செடிகள், அழகு;
குழாய் பாசனத்தில் கொட்டும் நீரும் அழகு;
குளக்கரையிலே மரக் கிளையில்கூடி வாழும் மரங்கொத்தி, கொக்கு, நாறை கிளி, குருவி, வாத்து, அன்றில் பறவையின் ஒற்றுமை அழகு;
அள்ளிப் பூத்த குளம் அழகு;
அள்ளித் தந்த கொடை அழகு;
சொல்லாமல் விண்ணில் பூத்த நட்டத்தி ர கூட்டங்கள் மினுக்கும் கண் அழகு;
முன் வந்து விளக்கேற்றிய முழு மதியிவள் வனப்பழகு;
வாய்க்கால் வரப்பழகு;
வாழை மீனின் வழ வழப்பழகு;
வழுக்கிவிடும் சேறழகு;
கெண்டை துள்ளும் கண் அழகு;
கொண்டை சேவலில் கூவும்குரல் அழகு;
யாழின் இசை அழகு
வாலின் முனையில் பூத்த மள்ளரின் வீரம் அழகு;
வேலில் பூத்த தெய்வீகம் அழகு;
மக்களின் வாழ்வழகு;
குடிசை வீடுழகு;
மச்சி வீடழகு;
மாட மாளிகை அழகு;
மருத நிலம் அழகு;
மண்வாசனையும் அழகு;
மல்லிகைப் பூவாய் விடிந்த பொழுதழகு;
வசந்த அழைப்பழகு;

பெண் அழகு; அவள் கண் அழகு;
பெண் பிடிக்கும் பிடிவாதம் அழகு
ஊர் அழகு; உறவழகு;
உடன் பிறந்த பிறப்பழகு;
உயிர் காக்கும் தோழமை அழகு;
வெயிலின் நிலழழகு,
வேந்தம் செங்கோள் அழகு;
வேந்தனின் ஆட்சி அழகு;
சோரம் போகாத சோழ பூமியில் வீரம் அழகு;
சோறுபடைத்த சோர்வில்லா உழைப்பழகு;
இந்திர விழாவில் நடைக்கும் கோலாகலம் அழகு;
சந்திரன் வரும் இரவு அழகு;
வெள்ளி பூத்த வான வீதி அழகு;
வெள்ளை மனது அழகு;
தென்னை தந்த இளநீரின் புத்துணர்சி அழகு;
தென்னங்கீற்றில் விழுந்து ஊடுருவம் நிலவொளி அழகு;
விடும் குரட்டை ஒலி அழகு;
விரட்டி வரும் விடியல் அழகு;
எங்கள் ஊரின் அழகின் அழகே! அழகு!!
அதிகாலை வணக்கம் கூறும் ஆதவனும் அழகு

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Mar-22, 11:56 am)
பார்வை : 331

மேலே