மௌனம்
நான் பேசிக்கொண்டிருந்தேன்
அம்மரத்திடம்
அதன் நிழல் வழிந்து
என் உடலை போர்த்திக்கொண்டிருந்த அவ்வேளையில்
அதனிலைகளின் வழியே
ஊடுருவும் வெயில்
கண் கூசுகிறது
லேசாக சினுங்கும்
அதனுடல்
சில இலைகளை என்னிடம்
உதிர்கிறது
என் கால்கள்
மரத்துப்போகின
மனதின்
ஆணிவேரிலிருந்து
சில சொற்கள்
எழ மறுத்து
பேசா விதைகளாகின
அக்கணத்தில்...