உங்களுக்காக ஒரு கடிதம் 10

அன்புத் தோழியே,
நன்றாக சாப்பிடு...நன்றாக சாப்பிடு...இதை மட்டும்தான் சொல்கிறீர்கள். Hb% பொதுவாக எவ்வளவு தேவை?
இரும்பு சத்தினால் என்ன பயன்? அதன் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன? இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகள் யாவை? அதை பற்றி சொல்லுங்களேன் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இந்தமட்டில் நீங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சியே.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும்,ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படவும் குறிப்பாக கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதற்கான பிராணவாயு (oxygen) கிடைப்பதற்கும் ரத்தத்தின் இரும்பு சத்து உதவுகிறது. இப்போது புரிந்திருக்குமே அதன் முக்கியத்துவம்.
இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள்
1. ரத்த சோகை
2. உடற் சோர்வு
3. மூச்சுவிட சிரமம்
4. தலைவலி
5. தூக்கமின்மை
6. எடைகுறைதல், எடை கூடுதல் (ஊளை சதை)
7. முடி வறண்டுபோய் உதிருத்தல்
8. நகங்கள் உடைந்து போகுதல்
9. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து
அடிக்கடி நோய்வாய் படுத்தல்.
இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகள்....கீரைகள் குறிப்பாக முருங்கை கீரை,அகத்திக்கீரை போன்றவை,கொணடகடலை,கிட்னி பீன்ஸ்,வேர்க்கடலை,முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, வால்நட், ஆப்ரிகாட்,உலர்ந்த திராட்ச்சை,பேரிச்சம் பழம்,சோயா பீன்ஸ்,பாசிப் பருப்பு, கருப்பு உளுந்து, கேழ்வரகு,பூசணி விதைகள்,சூரியகாந்தி விதைகள், ஆடு மற்றும் கோழியின் கல்லீரல், ஷெல் பிஷ், நண்டு, சார்ட்டன்ஸ் வகை மீன்கள் ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகமாகவும்,சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்,திராட்சை போன்ற பழங்கள், ஸ்டராபெரிஸ் பழத்தில் போலிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.கொய்யா பழத்திலும் விட்டமின் A மற்றும் நார்ச்சத்தும் பொட்டாசியம் காணப்படுகிறது.
Hb% 12 முதல் 14 வரை பராமரித்தால் போதும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். நீங்கள் சிங்கப்பெண்ணாக இருக்கவேண்டுமென்றால் இந்தப் பதிவை புரிந்துகொண்ட,மனதில் கொண்டு செயல்படுங்கள். ஒரு வலுவான சந்ததியை...சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பெண்ணாக வளருங்கள்...நல்ல தாயாக உருவாகுங்கள்.....வலுவான சமுதாயத்தை உருவாக்குங்கள்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-May-22, 8:59 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 56

மேலே