உங்களுக்காக ஒரு கடிதம் 11
அன்புத் தோழா,
ஹாய்.... ' நண்பா '...' தோழா '...' ப்ரோ ' ' மக்கா '... ' மச்சி '.... ' பங்கு ' ' காம்ரேட்ஸ் ' எப்படிவேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள். என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டால் சரி. நண்பா...என்று உன்னை கூப்பிடும்போதே நமக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறதே..நல்ல பாசிட்டிவ் எனர்ஜி ஊறுகிறதே....சந்தோஷம்தான். " ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் ...அனுபவி ராஜான்னு அனுப்பிவெச்சான்" என்று எதை பற்றியும் கவலை படாமல் அனுபவிக்க வேண்டிய வயசு... எல்லவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் இளமை..ஓ அந்த பருவத்தின் சந்தோஷமே தனிதான். என்ஜாய் நண்பா... என்ஜாய். மகிழ்ச்சி.
முதன் முதலாக அரும்பும் மீசையை தடவும்போது வருமே ஒரு திமிர்... பள்ளிக்கு சென்று... ரெட்டை சடை மோகினிகளை பார்க்கும்போது ஏற்படும் ஒரு மின்னதிர்வு...ஒரு இந்திரஜாலம் எரிமலையே உள்ளே வெடிக்குமே... அப்படி.... இப்படியென்று முன் முடியை கோதிவிட்டு ஒரு ஆட்டுஆட்டும்போது ஆயிரம் ரஜினி உன்னில் தோன்றுமே.... டேய் அவ என் ஆளு என்று ஒருத்தியை செலெக்ட் செய்து நண்பர்களிடம் கெத்து காமிக்கும் போது ஒரு மாதிரி வருமே அதை எப்படி வர்ணிப்பது? அனுபவித்தால் தெரியும். சரி பல்லிருக்கிறவன் பட்டாணி தின்கிறான் சரியா? " லைஃப் ஈஸ் வெரி ஷார்ட் நண்பா ஆல்வேஸ் பி ஹாப்பி "
சரி...உங்களை பற்றி கொஞ்சம் பேசலாமா? இந்த பருவத்தில் வரும் சில மாற்றங்கள்...எண்ணங்கள் .... இந்தப் பருவத்தில் எதையும் சாதிக்கமுடியும் என்று தோன்றும். எல்லாவற்றையும் சாதகமாக்கிக்கத் தோன்றும். பின் விளைவுகளை பற்றி சிறிதும் கவலைகொள்ளத் தோன்றாது. அரும்பு மீசை முளைவிடும்போதே ஒரு திமிர்...ஒரு கெத்து...ஒரு தன்னம்பிக்கை... உங்களுக்குள் தோன்ற ஆரம்பித்து விடும். நல்லதுதானே...இயற்கைதானே...ஆனால் இந்த பருவம் இரு பக்கமும் கூரான கத்திபோல. சரியாக கையாளவென்றால் வாழ்க்கையையே அழித்து நாசமாக்கி விடும். உங்களை சரி பண்ணுவதோ இல்லை அட்வைஸ் செய்து கழுத்தறுப்பதோ என் நோக்கமில்லை. உங்கள் பருவ பிரச்சனைகளை உங்கள் பார்வைகளை கொண்டே உங்களுக்கு எடுத்து காட்ட ஒரு முயற்சிதான். இதில் வெற்றிகிட்டுமா இல்லை தோல்விகிட்டுமா தெரியாது.ஆனால் என் உள்ளத்தில் தோன்றுவதை....உங்கள் செய்கைகளினால் எங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கருதி முயலுகிறேன். எங்களால்...எங்கள் நடவடிக்கைகளால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் நாம் ஆராயலாம்.சரிதானே .....
தொடருவோம்.