சிரமம் இல்லா வாழ்க்கை
ஆசிரமம் தரும்
சிரமம் இல்லா வாழ்க்கை
சீடர்கள் சீடிகள் சுற்றியிருக்க
எல்லோருக்கும் கிட்டாத
ஆனந்த வாழ்க்கை.
பக்தர்கள் காலில் விழுந்து வணங்குவது
சாமியார் யோகிகளுக்கே கிட்டும்!
அரசியலுக்கு வந்தாலும் மரியாதை
ஒதுங்கி இருந்தாலும் மரியாதை
நித்திய ஆனந்தம்
நித்தியைக் கேட்டால்
நெத்தியடி பதில் கிடைக்கும்.
காவிக்கு கிடைக்கும் மரியாதை
கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்காது.
அவர்களும் கோடிகளில் சம்பளம் வாங்கும்
நடிகர்களுங்கூட எனதருமை பக்தர்களே.
இல்லாதவனும் என் பக்தன்
மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக்
கட்டி வைத்திருப்பவனும் என் பக்தன்.
உலகின் முதல்நிலைப் பணக்காரன் கூட
ஒரு நாட்டை உருவாக்க முடியாது
கைலாசாவை ஆளும் நித்தியானந்தரைப்
பார்த்தவருக்கு சிரமம் இல்லா ஆசிரம
ஆசை வரும்.
அழகான இளம் பெண்கள்
அவர்கள் நடுவில் அமர்ந்திருக்கும் நித்தி!
யாரிந்த வாழ்க்கையை வெறுத்திடக்கூடும்?
கண் விழித்துப் பார்த்தால்
கனவாகும் போனதென் ஆசை.
ஒருத்தியை மணந்து நான் படும்பாடு
என் கனவுக்குள் தடைபோட வில்லையே!