கலைந்தாடும் கூந்தல் கனவுத்திரை விரிக்குது

மலைத்தென்றல் வீசுது
மாலைநிலா பேசுது
கலைந்தாடும் கூந்தல்
கனவுத்திரை விரிக்குது
அலைபாயும் நீலவிழிகள்
காதல்மொழி சொல்லுது
மலைத்து நிற்குது
மாலை மலரெல்லாம் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-22, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே