தினம் துளிர்விடும் வலிகள் 555

*** தினம் துளிர்விடும் வலிகள் 555 ***
என்னுயிரே...
இன்று இருக்கும் துணிவு அன்று
ஏன் இல்லை என்னிடம்...
ஓடிப்போவது எளிது
வாழ்வது எத்தனை கடினம்...
யோசிக்க தொடங்கினேன்
நீயோ யோசிக்காமல் பிரிந்துவிட்டாய்...
இடி விழுந்த மரம்
பட்டுபோவது போல...
உன் வார்த்தை
இடி விழுந்ததால்...
பட்டுபோனது என்
வாழ்க்கையும் நீயின்றி...
நீ கொடுத்த வலிகள் மட்டும்
துளிர்விட்டு கொண்டே இருக்கிறது...
உன்னை பார்க்க துடிக்கும் என்
கண்களுக்கு நீ விருந்து கொடுப்பாயா...
உயிராக
உன்னை காதலித்ததால்...
எப்படி உன்னை சந்தோசமாக
வாழவைப்பது யோசித்தேன்...
என் சிந்தனைக்கு செவி
கொடுக்காதவள் நீ...
இன்று உன்னை விமானத்தில்
அழைத்து செல்லும் திறன் உண்டு...
உன் காதலால் தான்
நான் உச்சம் தொட்டு இருக்கிறேன்...
சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள
நீதான் அருகில் இல்லை...
தினம் உன் விழியில் நான்
விழிக்க ஆசை கொண்டேன்...
உன்னை கொஞ்சினேன் நான்
உன்னிடம் கெஞ்சவில்லை...
நீ அதுதான் விரும்பினாயோ
தெரியவில்லை...
என் உயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***