என் உயிரின் சுவாசம் நீ 555

***என் உயிரின் சுவாசம் நீ 555 ***
உயிரானவளே...
முதல்முறை உன்னை
பார்த்தேன் ஒருநிமிடம்...
என்னை நான்
மறந்தேன் மறுநிமிடம்...
மெய்மறந்தேன்
உன் நினைவில்...
பலநாள் தொடர்ந்தேன்
உன் பின்னால்...
என் காதலை சொன்ன
அந்த நிமிடம்...
நீயும் ஏற்று
கொண்டது என் பேரின்பம்...
நாம் சேர்ந்து வாழ்ந்திட
நினைத்தேன் பலயுகம்...
நேசிக்கிறேன் என்று
சொல்வதைவிட...
என்னை கைவிடமாட்டேன்
என்று சொல் என்றாய்...
இந்த நிமிடம்வரை உன்னை
நான் கைவிட்டதில்லை...
நீயோ கைகழுவி
சென்றுவிட்டாய்...
நீ எவ்வளவு முக்கியம் என்
வாழ்வில் உனக்கு தெரியுமா...
நினைத்து
பார்க்க முடியவில்லை...
நீ
இல்லாத வாழ்க்கையை...
உன்
எண்ணத்தை பார்த்தால்...
என் நிழலைக்கூட உன்
நிழல் தொட போவதில்லை...
அனலாக நீ
மெழுகாக நான்...
என்
உயிரின் சுவாசம் நீ...
என் உயிரை
சுமக்கப்போவதும் நீ...
உயிரின் தீபம்
உருகி அணையுமுன்னே...
என்னை இறுக்கி
அணைத்திட வாடி கண்ணே.....
*** முதல்பூ .பெ .மணி.....***