மனசு தவிக்குது சொல்லாமலே 555

***மனசு தவிக்குது சொல்லாமலே 555 ***



ப்ரியமானவளே...


நீயும் நானும் என்ன
உறவு என்று தெரியாமலே...

உன்னை நேசிக்கிறேன்
கண்டா நாள் முதல்...

சொல்ல தெரியவில்லை
உன்மீதான என் அன்பை...

என் உலகம்
உன்னருகில்தான்...

உன்னிடம் நீண்ட நேரம்
பே
சிட நினைத்து ஏங்குகிறேன்...

என் இதயமும்
உனக்காக துடிக்கிறது...

என் சோகத்தையும்
சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ள...

நீ
வேண்டுமடி என்னருகில்...

ஒரு நிமிடம் வேண்
டும்
உன் மடிமீது தலைசாய்க்க...

மறுஜென்மம்
நம்பிக்கை இல்லை எனக்கு...

வாழும் இந்த ஜென்மத்தில்
உன் மடியும், தோளும் வேண்டும்...

உன் மனதை
தொடும் முயற்சியில்...

வழியும் துளி கண்ணீரும்
சுமைதான் எனக்கு...

சொல்லிவிட்டால் நீ
மறுத்துவிடுவாயோ...

தயக்கத்துடனே
என் நாட்கள் நகருதடி...

என்
காதலை சொல்லாமலே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (2-Jul-22, 8:49 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 628

மேலே