கப்பல் கவிழ்ந்தது - உண்மை சம்பவம்

பார்ப்பதற்குக் கண்ணைக் கவரும் அளவுக்கு
இல்லாவிடினும் ஓரளவு அழகான கப்பல்தான்.
பெரிதாக அந்நிய நாட்டுத் தொழில்நுட்பம் இல்லாமல்
முழுமையாக இங்கேயே தயாரிக்கப்பட்டது.
காலநிலை மோசமாக இருப்பினும்
முதல் பயணத்தைத் தள்ளி வைக்க மனமில்லை.
பயணம் இனிதே ஆரம்பித்தது.
கரையில் இருந்து முதலாளி தன் சக நண்பர்களுடன்
ஆனந்தமாய் கப்பல் கம்பீரமாய் செல்வதை ரசித்துக் கொண்டிருந்தார்.
அதற்குள் என்னவொரு சோதனை அங்கே!
சூறைக்காற்று ஒரு புறம் இருந்து அடிக்க
கனத்த மழைத்துளிகள் மேலிருந்து தண்ணீரை வாரி இறைக்க.
ஒரு சில மணித்துளிகளில் கப்பல் நிலைதடுமாறியது.
அவ்வளவுதான் சிறிது நேரத்தில் தலைகீழாக மூழ்கியது.
ஆச்சர்யம் என்னவெனில் அதற்காக கப்பல் முதலாளி
பெரிதாக கவலைப்படவில்லை. முகத்தில் சிறு மாறுதல் அவ்வளவுதான்.
உடனே வேகமாகச் சென்று அடுத்த காகிதத்தை எடுத்து
மடிக்க ஆரம்பித்தார் தனது அடுத்த கப்பலை செய்ய.
வருடத்தில் என்றோ வரும் மழை நிற்பதற்குள் அடுத்த
கப்பலை செய்து வீழாமல் செலுத்தி வெற்றிக்களிப்படைய...

எழுதியவர் : மனுநீதி (30-Jun-22, 4:49 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 194

மேலே