பேருக்குத் தகுந்த வேலை

என்ன தம்பி, மன அழுத்ததில இருக்கிற மாதிரி தெரியுது?

ஆமாம் அண்ணே. அந்த சோசியகாரரு பேச்சைக் கேட்டு அவுரு சொன்ன பேரை எம் பையனுக்கு வச்சது ரொம்பத் தப்பாமல் போச்சு அண்ணே.

என்னடா தம்பி ஆச்சு?

நேத்து என்னை அவனோட பள்ளிக்கு வரச்சொல்லி தகவல் வந்துச்சு. நேரா தலைமை ஆசிரியர் அறைக்குப் போனேன். எம் பையன் முட்டிபோட்டுட்டு இருந்தான். இரண்டு ஆசிரியர்கள் தலைல கட்டுப்போட்டு நின்னுட்டு இருந்தாங்க. வாங்கிய்யா நீங்கதான் ஜெயராமனா?

ஆமாங்க ஐயா.

உங்க பையன் பேரு என்ன?

சிண்டு.

உங்க பையனுக்கு யாரு அந்தப் பேரை வச்சது?

எங்க குடும்ப சோசியர் சோதிலிங்க சாஸ்திரி.

ஏய்யா நீங்க தமிழர்தானே. பெத்த பையனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பேரை வைக்கத் தெரியாது. சோதிடர் சொன்னாருன்னு அவர் பேச்சைக் கேட்டு உம் பையனுக்கு 'சிண்டு'னு பேரு வச்சிருக்கிறே. எட்டாம் வகுப்பு படிக்கிற உன் பையன் அவன் பேருக்குத் தகுந்த

எழுதியவர் : மலர் (1-Jul-22, 11:42 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 93

மேலே