முனியாது சொல்லிற்றுச் செய்து ஏத்திப் பணியும் இல்லாள் - அறநெறிச்சாரம் 161
இன்னிசை வெண்பா
வழிபா(டு) உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங்(கு) எதிருரையா(து)
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து 161
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
கணவன் கொள்கையை அப்படியே ஏற்று அவன் எண்ணத்திற்கு இணங்க வாழ்க்கையினை நடத்தி அவன் சொல்லியபடி கோபமும் வெறுப்புமின்றிச் செய்து, அவன் சொல்வதை மறுத்துரைக்காமல் புகழ்ந்து பணிவுடன் செய்யும் மனைவியை வாழ்த்தி கணவன் விரும்பி காத்தல் செய்வான்.

