என்
ஆகச் சிறந்த கவிதையை
அன்றைக்கு கண்டடைந்தேன்.
எழுதலாம்
எங்கே போகப் போகிறது
என்று
மற்ற மற்ற வேலைகளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்.
பறந்தே போய்விட்டது. ஆம்
மறந்தே போய்விட்டது.
எந்த மூலையில் ஒளிந்துகொண்டது
என்று
ஞாபக முடிச்சை
அவிழ்க்கப் பார்த்தேன்.
அவிழ மறந்து அடம்பிடித்தது.
விட்டு விட்டேன்
வேறென்ன செய்வது.
இன்னொரு நாள்
எதையோ தேடப்போய்
இந்தக் கவிதை கிடைக்கலாம்.
அதுவரை
காத்திருப்போம்
நானும், நீங்களும்!!