பிடிபட மறுக்கும் பேரழகு

ஒளிப்படத்தில்
பிடிபட மறுக்கும்
பேரழகை
என்ன செய்வது?

பூவிலிருந்து கசியும்
வாசனை போல்
அவளில் இருந்த
அழகு
வெளியேறுகிறதா?

கதவுக்குப் பின்னால்
ஒளிந்து நின்ற
நம் பாட்டிபோல்
அவள் அழகு
ஒளிந்து கொள்கிறதா?

நான் தோற்கிறேனே
தோற்பது தெரிந்து
தோற்கிறேனே
என்று
பின் மண்டையில்
தட்டிக் கொண்டான்
ஆவிந்தன்.

மீண்டும் மீண்டும் ஆன
முயற்சிகள்
பலன் அளிக்கவில்லை.

அவளைப் போலவே
அவள் அழகும்
பிடிபட மறுக்கிறது.

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:37 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 92

மேலே