உருவம்

சிறகசைக்காத
பறவையாய் நின்றாய்.

பூவாசனையும்
புலப்படவில்லை.

உன்
மௌனமும்
பேச மறுத்தது.

உன் விழிகளும்
நிலைகுத்தி நின்றன
உன் இதழ்களும்
இருந்து கிடந்தன.

மொத்தத்தில்
ஒளிப்படத்தில் விழுந்த
உருவமாய் தெரிந்தாய்.

ஒன்று தெரியுமா
ஒளிப்படத்தில் தெரிவது
உன் உருவமல்ல
உன் மனம்,

எழுதியவர் : வானம்பாடி கவிஞர் கனவுதாச (10-Nov-22, 9:31 am)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : uruvam
பார்வை : 60

மேலே