மனித மனங்களே வெறுமையாய் இரு

இவ்வுலகம் மிகவும் அழகானது.
ஓவ்வொரு நாளும் புதிதாக பிறக்கும் வரை
இரவு கண் உறங்கும் போது பழைய கசப்பான நினைவலைகளை மறந்து
பகல் கண் விழிக்கும் போது புதிதான
நினைவலைகளில் அசைபோட
இவ்வுலகம் மிகவும் அழகானது.
புதிதானது.
அரிதானது.
வாழ்வே சொர்க்கம் சொர்க்கமே வாழ்வு
வாழ்கின்ற வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும் வரை
மனித மனங்களைப் தெரிந்து கொள்வதற்கும்
மனித குணங்களைத் புரிந்து கொள்வதற்கும்
மனித இனங்களைத் தேர்ந்து கொள்வதற்கும்
இவ்வுலகம் மிகவும் அழகானது.
மழலைக்குச - சிரிப்பு போதும்
இளவயதினருக்கு - இனிமையான பேச்சு
போதும்
தாய்க்கு - தகைமைப்பண்பு போதும்
தந்தைக்கு - தலைமைப்பண்பு போதும்
தமக்கைக்கு - தன்னம்பிக்கை ஊட்டத் தெரிந்தால் போதும்.
தம்பிக்கு - நம்மை நம்பி ஒரு ஆள் இருந்தால் போதும்.
நண்பன் - நல்லதைச் சொல்லி நலமாய் வாழ துணையாய் இருந்தால் போதும்.
மகன் - பெற்றதால் பிறரை மகிழ்வித்து தானும் மகிழ்ந்தால் போதும்.
மகள் - நாளைப் பெறப்போகும் பிறப்பால் இன்று தாயாக நினைத்தால் போதும். மனைவி - மனைக்கு வருபவள் என்று இல்லாமல் மனதிற்கு இணக்கமானவள் என்று நினைத்தால் போதும்.
கணவன்-கண்ணாய் இருந்து காப்பவனாக இருந்தால் போதும்.

எழுதியவர் : சு.சிவசங்கரி (29-Jan-23, 7:25 pm)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 32

மேலே