நண்பன்
கூடா தாரோடு கூடி எல்லாம்
பாடாய் இழந்து வீழ்ச்சியை நோக்கி
சென்றாலும் அந்நண்பனை விட்டு விலகாது
அக்கூடாரை அறிந்து அவரை வென்று
நண்பனை மீட்டு மீண்டும் அவனை
வெற்றிப் பாதைக்கு கொண்டுவந்து
வெற்றி நடைப் போடா வைப்பான்
அவன்தான் உண்மை நண்பன்