எப்படி மறப்பேன்
எப்படி மறப்பேன்.
மென்மையாக
நீ பாட்டுப் பாட,
கேட்டே மகிழ்ந்து
அப்படியே உன் மடியில்
தூங்கி விடுவேன்.
தூங்கி எழுந்தவுடன்,
பால் சுரக்கும் முலையில்
பால் குடிக்க விட்டே,
பார்த்தே மகிழ்ந்திடுவாய்.
பால் குடித்திருக்க
பாட்டுப் பாடி மீண்டும்
தூங்க வைப்பாய்,
பாலுட்டி பாலுட்டி
வளர்த்த உன் முகத்தை.
எப்படி மறப்பேன்?
ஆக்கம்
சண்டியூர் பாலன்.

