என் காதல் உண்மை என்பதால் 555

***என் காதல் உண்மை என்பதால் 555 ***


ப்ரியமானவளே...


என்னை மறந்து
போன உன்னை...

என் நினைவுகள்
மீட்டு எடுக்கிறது...

உன் நினைவுகளுடன்
கனவில் இ
ருந்த என்னை...

தொலை தூரத்தில் ஒலித்த
பாடல் ஒன்று தட்டி எழுப்புதடி...

உன்னுடன்
இருந்த நினைவுகளை...

என் உறக்கத்தில் கனவுகள்
கலைந்த நேரத்தில் உணர்ந்தேன்...

உன் நினைவுகளும்
என்னை ஏமாற்றியதை...

வெட்டப்பட்ட மரமும்
துளிர் விடும் துளி நீர் பட்டதும்...

உன் மூச்சு காற்று பட்டால்
என் உயிர் நாடியும் துளிர்விடுமடி...

இன்னும் உன்
னை காதலித்து
கொண்டுதான் இருக்கிறேன்...

உன்மேல் கொண்ட என் காதல்
உண்மை என்பதால்.....


***முத
ல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (14-Jun-23, 4:59 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 492

மேலே