அழகிடம் பதியாய்

இரு விழி ஓர் அழகை காண்ப...
மதி மயங்கி மறுமொழி சொல்லேன் நானும்... !!

அவளின்,
அல்லி மலர் நிர இதழ் கண்டு
சுழி காற்றும் ஓர் திசை நிற்க
இசையாது நின்றது சுற்றம்...!!

கொதி வந்த பாலாடை தேகம்
ஓர் கதி செய்தது என் மனதை...!!

அவளுக்கு பதி ஆக
சதி செய்தது என் குணம் ...!!

நதி போல் ஓடும் வாழ்வும்
அவளுடன் பாதியாய் கழித்திட
என் கருவிழி உற்று நோக்கிய
அவள் விழி இமை அசைக்க வேண்டுமே....!!
-இந்திரா

எழுதியவர் : இந்திரா (14-Jun-23, 3:37 pm)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 157

மேலே