என்னையும் ஏன்பார்க்கிறாய் சொல்

புன்னகையில் நீவரும் போதுபூ நாணிமூடும்
மென்மைநல் ரோஜா மலரும் விதிவிலக்கோ
மான்விழி ஏந்திநீ மௌனமாய் என்னையும்
ஏன்பார்க்கி றாய்சொல் எழில் ?

புன்னகையில் நீவரும் போதுபூ நாணிமூடும்
மென்மைநல் ரோஜா மலருமே -- மின்னிடும்
மான்விழி ஏந்திநீ மௌனமாய் என்னையும்
ஏன்பார்க்கி றாய்சொல் எழில் ?

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-23, 2:49 pm)
பார்வை : 84

மேலே