செவ்வந்தி பெண்ணொருத்தி

வண்ண வண்ண நிறங்களில்
தனை அலங்கரிக்கும் செவ்வந்தியாய்
நித்தமொரு நிறத்தில் நீங்காது
பின்தொடரும் நித்திலம் அவள்....

மங்கையர் மனதை அபகரிக்கும்
வண்ண செவ்வந்திபோல் - இவள்
நித்தமொரு நிறத்தில் யென்மனதை
மோதும் ஆர்ப்பரிக்கும் பேரலை.....

சிற்றலையில் சின்னா பின்னமாகும்
சின்னஞ்சிறு ஆடவன் - நான்,
ஆர்ப்பரிக்கும் இப்பேரலைக்கு சுயம்
மறந்து அந்தமாகிப் போனேனே....

எழுதியவர் : கவிபாரதீ (6-Jul-23, 5:05 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 249

மேலே