பண மரம்
பணம் காய்க்கிறது
என் வீட்டு மரத்தில்
பறித்துக்கொடுக்க
ஆசைப்பட்டு
மனிதர்களை தேடுகிறேன்
யாரும் முன் வரவில்லை
பணத்தை வாங்க...
ஆச்சர்யத்தில் உறைந்துபோய்
விசாரித்ததில்
எல்லோரும் பணக்காரர்கலாம்
ஏழைகளே இல்லா நாடு
நம் நாடு என்கிறார்கள்
விழித்து பார்த்த போதுதான்
தெரிகின்றது அனைத்தும்
கனவு என்று....

