1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

'80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..

பொங்கல் சாட்டுதல்

பொங்கல் என்றால் தைப் பொங்கல்தானே..அதுதாங்க..இல்லை.. எங்க ஊருல பொங்கல் என்பது அம்மன் கோவில் திருவிழாவைத்தான் அப்படி அழைப்பதுண்டு..

கொடை சாட்டுதல்..கம்பம் நாட்டுதல்னா விழாவின் துவக்க நாளில் சாமியிடம் விழா நடத்த உத்தரவு வாங்கும் நிகழ்வே பொங்கல் சாட்டுதல் என்பார்கள்..சில இடங்களில் கம்பம் சாட்டுதல் என்பார்கள். உத்தரவு வாங்கிய பின் சாமியின் உத்தரவுப்படி மரங்களில் சூலம் போன்ற பகுதியை வெட்டி அக்கம்பை கோவிலியின் முன்பகுதியில் நட்டு வைத்து மஞ்சலிட்டு பாலல் திருமுழுக்கு (அபிசேகம்) செய்யப்படும்..

பின் தீப ஆராதனை காட்டப்படும் இது போன்று பத்து நாள் திருவிழாவிலும் நடைபெறும்..

அதன் பின் விரதம் கடைப்பிடிப்பவர்கள்..சாமியாடிகள் மஞ்சள் ஆடை உடுத்தி வந்து கையில் காப்பு கட்டிக் கொள்வர்கள்..

அதவாது வெள்ளைத் துணியில் மஞ்சள் தடவி அதன் மத்தியில் 5 காசு 10 காசுகளையோ அல்லது மஞ்சள் துண்டுகளை முடிந்து கையில் கட்டிக் கொள்வார்கள்...

காப்புக் கட்டுவது ஏன் ?...

நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்குமாம்.

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Jul-23, 6:06 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 38

மேலே