சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 27
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 27
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் சிவலிங்கத்தினை சூரியக் கதிர்கள் தரிசனத்தின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தட்சன் நடத்திய யாகத்தில்
தரணி முழுமையும் அழைத்தான்
திருமகள் கனவன் சிவபெருமானுக்கு அழைப்பில்லா
யாகத்தில் சூரியன் சந்திரன்
முதன்மையில் அமர்ந்ததைக் கண்டிட்ட
மூர்த்திச் சினமுற்று அவர்களின்
ஒளியை முடக்கி இருளாக்கினார்
சூரியன் சந்திரன் யாகத்தில்
சிவனின்றி கலந்திட்ட தவறினை
உணர்ந்தச் சூரியன் சந்திரன்
உதயமாகி ஒளித் தந்திட
ஈசனுக்கு ஈகையாகச் செய்ய
வேண்டியது என்ன என்று
குருவிடம் கண் கலங்க
புன்னைமரம் நிறைந்தப் புன்னைவனச்
சங்கரலிங்கரைப் பூஜித்தாள் ஒளிபெருவாயென
குரு போதிக்கச் சங்கரன்கோவில்
சங்கரலிங்கர் மேனியின் மீது
காலைக் கதிரவன் கதிர்களை
கட்டித் தங்கத்தை உருக்கி
அபிஷேகமாகச் சேஷ்த்திரம் முழுமையும்
பொன்மஞ்சளாய் தகதகவென ஜொலிக்கும்
சிவலிங்கத் தரிசனம் காண கிடைக்க
இறைஞானமேனும் அறிவியல் விஞ்ஞானம்
மார்ச் மற்றும் செப்டம்பர்
21,22,23 தேதிகளில்
மனிதன் தொழ மறந்தாலும்
ஆதவன் மறப்பதில்லை
சூரியன் சிவனைப் பூசிக்கும் 16
சேஷ்த்திரங்களில் சங்கையும் ஒன்று....
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்