கொஞ்சம் கொஞ்சமாய்

கொஞ்சம் கொஞ்சமாய்

நடந்து சென்ற
படிகட்டுகள்
இன்று
நகர்ந்து சென்று
நம்மை சேர்க்கின்றன

ஓற்றை விரல்
நுனி
நகர்ந்து
உலகத்தை
பார்வைக்கு
கொடுக்கிறது
கைபேசி

பருத்தி சிரித்து
ஆடைகளாய்
தொங்குகிறது
கடைகளில்

இருப்பது
ஒரு நாளோ இரு நாளோ
புன்னகையுடனே
போவோம் என்று
நினைக்கின்றன
இங்கு பூத்திருந்த
மல்லிகை பூக்கள்

அடுக்கி வைக்கப்பட்ட
புத்தகங்கள்
ஆவலுடன் காத்திருக்கின்றன
வாசிப்பவர்களுக்காக

நாளை ஞாயிறு
நாள் குறித்து
படுக்க சென்றான்
சேவலுக்கு உரிமையாளன்

விடியலிலேயே
அவனை கூவி
எழுப்பி விட்ட
மகிழ்ச்சியில்
திளைத்து கொண்டிருக்கிறது
இந்த சேவல்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Aug-23, 9:57 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : konjam konjamai
பார்வை : 165

மேலே