சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 25
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 25
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆடி : 25
°°°°°°°°°°°
சங்கரன்கோவில் தலத்தின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கங்கை யமுனை சரஸ்வதி சங்கமிக்கும்
திரிவேணியில் நீராடினால் கிடைக்கும் புண்ணியம் போல்
சைவம் வைணவ சக்தி வழிபாடு
இம்மூன்றும் இணைந்தச் சிறப்பு ஸ்தலமான
சங்கையில் வழிபட்டால் சகலப் பாக்கியமும் கிட்டும்
கங்கையை முடியில் சூடியச் சிவனும்
யமுனை நதிக்கரையில் வளர்ந்தத் திருமாலும்
சரஸ்வதியெனும் வடிவில் ஆதிபராசக்தியாகியக் கோமதியாகத்
திரிவேணியாகச் சங்கமித்து சங்கையில் அருள்புரியும்
சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் அரியர்த்தர் திருக்கோலத்தில்
வலப்பக்கம் சிவனும் இடப்பக்கம் திருமாலும்
சிவன் அபிஷேகப் பிரியர்யயினும்
திருமாலின் அலங்காரப் பிரியர்யெனவே
திருமாலுக்கு உகந்த அலங்காரத்தில்
தலத்தின் நடுமண்டபத்தில் அருள்புரிகின்றனர்
பொருள் கோடி இருந்தாலும்
பெயரைத் தரணி சொன்னாலும்
புகழ் வானுயரம் உயர்ந்தாலும்
உருவுள்ள உடல் உள்ளவரை மட்டுமே
உயிரற்ற பின் உடல்
உருவற்ற சாம்பாலாகுவதை உணர்த்தவே
சங்கரலிங்கர் அருவ வடிவான
சிரம் கரம் சரீரமின்றி
லிங்கமாகத் தென் மண்டபத்தில் அருள்புரிகிறார்
மீனாட்சியின் சகோதரியாம் மதிமுகம் கொண்டவளம்
கருணை வடிவில் தவக்கோலத்தில்
கிரியாச் சக்தியாகக் கோமதியாக
வடமண்டபத்தில் காட்சித் தந்து
வணங்கிடும் மாந்தர்களை துன்பம் வந்திடா
வரங்களைக் கொடுத்துக் கரங்களை உயர்த்தி
எண்ணியக் காரியங்களை நிறைவேற்றி
என்றும் இடையில்லா இன்பத்தைத் தருகின்றனர் ....
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்