சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 24
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 24
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கரன்கோவில் கோபுர சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோபுரத்தில் பெரியது சங்கரநாராயணர்
கோவில் கோபுரம்
கோபுரத்தின் நுழைவாயிலின் நிலை
தூண்கள் 30 அடியில் ஒரே
கல்லில் செதுக்கப்பட்ட அற்புத தூண்களாக
ஹாரத்தாகப் பதித்து அதன் மேல்
கல்லினை அடுக்கி
கீழ்நிலை இரு அமைத்து
வெள்ளிக் கரைந்து பசும்பால்ப் போன்ற
வெண்சுண்ணாம்பும் கல்லும் உலகமும்
மண்ணும் மரமும்
மதயானைத் தந்தமும்
சர்க்கரை மெழுகும் கலந்து
சிற்பத் தொழில்நுட்பமாக
ஒன்பது நிலை அமைத்து
ஒவ்வொரு நிலையிலும் தெற்கே தட்சிணாமூர்த்தி
சனகாதி முனிவர்களுடன் தருகிற காட்சியும்
சங்கரநாராயணர் கோவில் புராண வரலாற்றை
சிற்ப்பமாக கோபுரத்தின் காட்சி தத்ரூபம்
இந்நிலை இணைக்கும் வாசல் காதவுகள்
இருபத்தி மூன்று அடியில்
இரு பிரிவாக 32 சிற்பங்களுடன் சிறப்புற்று
இரு நிலைகளில் கல்வெட்டுகள் காட்சியும்
ஒன்பதாவது நிலையில் நாழிகைக் கடிகாரம்
ஒவ்வொரு முறையும் இரண்டு நழிகைக்கு
ஒரு முறை மணி அடிக்கும்
கோபுரம் அமைத்து சங்கைக்கு பெருமை
சேர்த்திட்ட உமாபதி சிவாச்சாரியார்
அனைத்தையும் ஆளும் இறைவன் நீ
பாதுகாக்க மறந்த உலகமும் உண்டோ
உன் அருள் இன்றி அணுவும் அமையாது
நீயே எல்லாம் அதற்கு சாட்சியாக
இருக்கின்ற உன்னை காண
கோபுர வாசலில் கொடி கட்டினேன்
எனக் கோபுரம் அமைத்துப்
பாமாலை சூட்டினார்...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்