சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 23
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 23
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபுர தரிசனம்
°°°°°°°°°°°°°°°°°°°°°
வான் உயரக் கோபுரம்
வணங்கிடக் கிடைத்திடும் பாக்கியம்
சந்திரனைத் தொடும் கோபுரம்
சன்னதிக்கு வழிக் காட்டிடும்
கைகூப்பித் தலைக்கு மேல்த் தூக்கி
கோபுரத்தை வழிபட்டுப் புலன் அடங்கி
கடவுளை அடைந்தால் பாவங்கள் அகலும்
காற்றில் கலந்துள்ள இறைவனின்
காக்கும் திருவருளை கருவறைக்குள்
திருவுருவச் சிலை சக்தியை ஈர்த்து
திருவடி ஒன்பது சக்தியாக பிரித்து
வணங்கிடுவோர் கைவிரல் வழி நூழைந்து
வளமான வாழ்வைத் தரும்
தங்கத்தினால் மெருகேற்றியக் கலசமும்
திருக்கோபுரத்தின் ஓவியமும் சிற்மும்
திருமுறை வேதமந்திரங்கள் ஓதும்
திருவுருவ இசை நடனக்கலைச் சிலைகள்
தமிழன் கட்டிடக் கலையை பறைசாற்றும்
கோபுரத்தில் பெரியது சங்கரநாராயணர்
கோவில் கோபுரம்
கோபுரத்தின் நுழைவாயிலின் நிலை
தூண்கள் 30 அடியில் ஒரே
கல்லில் செதுக்கப்பட்ட அற்புத தூண்களாக
ஹாரத்தாகப் பதித்து அதன் மேல்
கல்லினை அடுக்கி
கீழ்நிலை இரு அமைத்து
வெள்ளிக் கரைந்து பசும்பால்ப் போன்று
வெண்சுண்ணாம்பும் கல்லும் உலகமும்
மண்ணும் மரமும்
மதயானைத் தந்தமும்
சர்க்கரை மெழுகும் கலந்து
சிற்பத் தொழில்நுட்பமாக
ஒன்பது நிலை அமைத்து ....
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்