பூப்பூவா பூத்திருக்கு
பூப்பூவா பூத்திருக்கு
•••••••••••••••••••••••••••••
கரிசல்க் காட்டு
கம்மாக்கரை ஓரம்
பூக்கள் மலர்ந்து
புன்னகைக்கும் பூஞ்சோலையில்
கண்டாங்கிச் சேலையில்
கன்னி அவள்
கண் பட்டாள்
கயல் மீன்
கண்ணால் தூது விட்டாள்
கண்ணால் நானும்
மெளன மொழிப் பேச
மோதிய விழிக்குள்
காதல் மோகம் தீண்ட
கண்டதும் காதலோ ! இல்லை ,
எனக்காக அவளை இவ்வுலகில்
பிரம்மன் படைத்திருப்பான்
பருவம் வந்தப் பின்
காமதேவன் காதலைத் தூண்டி
காதலிக்க விழித் திறந்திருப்பான்
பூக்கூடை இறக்கி வைத்து
பார்வையிலிருந்து அம்மாவாசை நிலவாக
மறைந்தாளே எனை மறந்தாளோ
மனதில் பதிந்தவள்
மணமாகி மணப்பெண்ணாக
வர வேண்டுகிறேன் மன்மதனிடம் ...
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

