மௌன முன்னுரை

புன்னகைக்குப் புத்தகம் எழுதினேன்
முன்னுரை எழுத உன்னிடம் தந்தேன்
புத்தகத்தை முத்தமிட்டு
நெஞ்சோடு அணைத்து திருப்பித் தந்தாய்
அந்த மௌன முன்னுரையை
நான் முன்னுரையில் எழுதினேன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-23, 7:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mouna munnurai
பார்வை : 60

மேலே