சிக்க வச்ச பேரு

எங்க கொள்ளுத் தாத்தா பள்ளிக்குப் போனதில்லை. சின்ன வயசிலேயே திருட்டுத் தொழிலைக் கத்துட்டு சிறப்பாக வாழ்ந்தாராம். தாத்தா அஞ்சாம் வகுப்பு. எங்க பரம்பரையில் அதுதான் அதிகப் படிப்பு. தாத்தா கொள்ளுத் தாத்தா தொழிலில் முழுமூச்சாக செயல்பட்டு வாழ்ந்து தொழிலை விட்டுவிட்டு ஓய்வில் இருக்கிறார்.

என்னோட அப்பா எங்க தாத்தாவுக்கு வாரிசு தொழிலில். அவரும் அஞ்சாம் வகுப்பு படிச்சவரு. நான் ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே தொழில் நுணுக்கங்களை எல்லாம் என்னோட அப்பா காத்துக் குடுத்தார்.

எப்படி திருடுவது. எதை, எஙகே, யாரிடம் திருடுவது. திருடுவதை எங்கே பதிக்கி வைப்பது; விற்பது. மிக முக்கியமான விசயம் காவலர்கள் கையில் மாட்டாமல் எப்படி தப்பிப்பது. இதெல்லாம் அவர் கத்துக் கொடுத்த பாடம். அஞ்சாம் வகுப்பு படிச்சு முடிச்சு உடனே பரம்பரைச் தொழில் செய்ய ஆரம்பிச்சேன்.

நான் பிறந்த அடுத்த நாளே ஒரு சோசியரைப் பார்த்து எனக்கு சாதகம் எழுதினாங்களாம். எனக்கு 'சிக்குனேசு' (ஜிக்னேஷ்)னு அந்த சோசியர்தான் பேரு வச்சாராம். எங்க பரம்பரைச் தொழிலைப் பத்தி அவருக்குத் தெரியுமாம். அவர் சொன்னாராம் "உங்க பையன் ரொம்ப எச்சரிக்கையா தொழிலைச் செய்யணும். கொஞ்சம் தவறினாலும் மாட்டிக்குவான்"னு எச்சரிச்சாராம்.

இதைச் நான் சொல்லறபோது எனக்கு வயசு பதினாறு. காவல் நிலையத்தில் இருந்து சொல்லறேன். ஒரு குழந்தை கழுத்தில அழகான தங்கச் சங்கிலியோட வந்துச்சு. அது என் கண்ணை உறுத்துச்சு. அந்த பாப்பாவுக்கு 🍬 மிட்டாய் கொடுத்து ஏமாத்தி சங்கிலியை எடுத்துட்டு நிமிர்ந்து ஓட முயற்சித்த போது ஒரு மீசைக்கார ஆசாமி என்னை ஒரே அமுக்கா அமுக்கி பிடிச்சு காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்துட்டாரு. அவர் அந்த காவல் நிலைய

எழுதியவர் : மலர். (3-Oct-23, 4:18 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : saikka vacha peru
பார்வை : 31

மேலே