கண்விழிக்கும் நேரம் தேடுகிறேன் உன்னை 555

***கண்விழிக்கும் நேரம் தேடுகிறேன் உன்னை 555 ***

நினைவானவளே...


மின்னி மறையும்
மின்மினி பூச்சிபோல...

உன் பார்வை என்மேல்
விழுந்தும் விழாமலும்...

அந்த பார்வையே கண்ணை
பறிக்கும் மின்னலாய்...

தினம்
என்னை தாக்குகிறது...

உன்னை கண்டதும்
எனக்குள்
வெளிப்படும் வார்த்தைகள் கூட...

உன் பார்வையில்
சப்தமின்றி மௌனிக்கிறது...

உன் பார்வையால் புரட்டி போட்ட
என் உள்ளம் காதலாக மாறியது...

சொல்லாத காதலால்
உனக்கும்
எனக்கும் இடைவெளி தூரம்தான்...

உன் பார்வைக்கும்
எனக்கும் தூரமில்லை...

இரவெல்லாம் கனவில்
வந்து வந்து போகிறவள்...

உன் இதய கூட்டில் என்னை
அனு
மதிக்க போவதெப்போ...

நீயின்றி உறங்கும்
இரவு நகர்வதே இல்லை...

கண்விழிக்கும் நேரங்க
ளில்
உன்னை தேடுகிறேன்...

ஏதேனும்
ஒரு காலைநேரம்...

உன் முகம் பார்த்து
விடியாதா என்று...

என் துணைவியாக.....


***முதல்பூ .பெ .மணி .....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (2-Nov-23, 2:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 455

மேலே