வண்ணக் காதல்
நாலுகுண மோடுடைய நாணலிடை தானுடைய
நீலவிழி யோடமுத நீரருவி யேயுடைய
கோலமயி லாளினிரு கூனலுள தானபிறை நுதலாமே
*
பாலுமத னோடுபழ பாகுமென தேனருவி
யாளுடைய பூவிதழி லோடிவர வேயழகு
மேலுமொரு காவியமு மேயுருவு மாகுமது புதிதாமே
*
போலியொடு பூவிதழி னூடவளு மேசிறிது
கேலியென வேநகையை கீழுதடு மேலுதடி
னாலிழைய வேவிடுவ தோரெழிழை யேதருவ ததனாலே
*
வேலியென வேயவளை வீரமொடு காவலுற
தாலியிட வேயருமை தாரமென வாகுவதை
ஆழியலை யாகுமன வாசையது பேசுவது புரியாதே
*
மாலையொடு சேருகிற நாருமென நாறிவிட
லீலையுறு வேலைவர வேளைவர வேதினமு
மாலைமுத லாகிவிடி காலைவர லாகுமெனு நிலையோடே
*
மாலையிடு நாயகனை மாரதனி லூடலொடு
சேலைமயி லானரதி சேரவரு மேகனவு
சோலையினை யேயறிய சூழுமிரு ளாவதொரு சுகமாமே
*
காலிலொலி யோடுலவி கானமழை யாகிவிழு
மாலிலையி லானவடி வானதிரு வாபரண
மேலிழைய மேவிவரு மேயதனை மேயுமிள மனதாலே
*
பீலிமயி லாடவொரு பீடிகையு மாகிவரு
மாமொலியி னாடகமு மாமழையி லேநனைய
கூலியற சோலிதரு மேயதனி லேயுறவு முறலாமே
*
(வண்ணம்)
மெய்யன் நடராஜ்