ஆசை வச்சு காத்திருக்கேன் மீசை மச்சானே
ஆசை வச்சு காத்திருக்கேன் மீசை மச்சானே...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காடு கழனி வேலை பார்த்த /
களைப்பு தீர்க்க எலும்பு சாறுடன் /
வெடக் கொழி ரெண்டும் சமைச்சிருக்கேன் /
வாடா மல்லி பூச்சூடி காத்திருக்கேன் /
கதிரவன் உதிக்கும் முன் வயலுக்கு/
கதிர் அறுக்க போன மச்சான்/
அந்தி வேளை வந்திருச்சு வானத்தில்/
அழுகு நிலா உலா வந்திருச்சு/
கருமேகமே மச்சானிடம் தூது போ /
காத்திருக்கும் வஞ்சியவளின் ஏக்கத்தை சொல்ல/
பச்சக்கிளியே தூது போ மச்சினியின்/
பாசப் போராட்டத்தை போய்ச் சொல்ல/
தென்னையை அணைத்து முத்தமிட்டு செல்லும்/
தென்றல் காற்றே தூது சென்று /
கெட்டியாக அணைக்க மச்சானை வரச்சொல்லுங்க/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்