சொல்லாத காதல்

சொல்லிய காதலே
காணாமல் போகும் நேரம்,
சொல்லாத காதல்
எப்படி கரையோடு சேரும்?
உண்மையின் மூலம்
நீயும் ஆறுதல் தேடு.
கவலையோ, கண்ணீரோ
பயனில்லை, நீயும் கொண்டாடு.
எல்லைகள் தாண்டி,
சாதிக்க வேண்டியது எத்தனையோ
உனக்காக காத்திருக்க
வருந்தாதே கிட்டாததை வேண்டி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Nov-23, 5:34 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 320

மேலே