தனிமுகங் காட்ட வேண்டேன் தகவுடன் வாழ வேண்டும் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
தனிமுகங் காட்ட வேண்டேன்;
..தகவுடன் வாழ வேண்டும்;
பனித்துளி யளவே யேனும்
..பகையினை விலக்கல் நன்றே!
தனிமுத லென்ற னுள்ளந்
..தாங்குமோ துயரந் தன்னை;
எனையவர் கருத்தில் வைத்தே
..யின்பமு மளிப்ப ரன்றோ!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
