நன்மதி வெண்பா - நூல் - பாடல் 8
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
அரியபசிக் காஞ்சோ றமுதுவருத் தாமற்
றருபவனே வள்ளறனைச் சாரும் - ஒருதுயரம்
தாங்கவல்லா னாண்டகையாந் தைரியவா னன்மதியே
ஓங்கு குலமணியென் றோது! 8