பொற்சபை யிறையுனையே போற்றினேன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளம் காய் கூவிளம் காய்)
(1, 3 சீர்களில் மோனை)

கற்பனை என்றாலுங் கற்சிலை என்றாலும்
தெற்றென நற்றுணையாய்த் தெய்வமே நீதானே!
உற்றது முனையன்றி யுள்ளரோ வேறெவரும்;
பொற்சபை யிறையுனையே போற்றினேன் காத்தருளே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-23, 7:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே