இதழ்களுக்கிடையே
மூச்சுக் காற்றின்
சூட்டைத் தணிக்க...?
இதழ்கள் ஈரத்தை - பரிமாறிக்
கொண்டன !
சத்தமின்றி ஒரு
யுத்தம் அரங்கேற ...?
இதயம் -
"இதழ்களுக்கிடையே"
போர் என - கட்டியம் கூற... ?
நாணத்தால் - முகம்
சிவந்தது.!
கண்கள் -
இதைக் காண்பது
பிழையோ என் எண்ணி -
இமைக் கதவுகளை
மூட ,,,,!
செவிகள் மட்டும் -
கிரக்கத்தோடு ரசித்தது. !!!
இதழ்களின் -
கலந்துரையாடலில் -
மொழி விலகி நின்றது !!!
நாவடக்கம் என்னவென்று
நா உணர்ந்தது. !!!
உரசலின் வெம்மையால்
வியர்வை துளிர்விட்டது !!!
மௌனம் - சம்மதமின்றி
சாட்சியானது...!!!
சீரான இதய துடிப்பு
முரன்பட்டது !!!
உடல்களுக்கிடையே
இடைவெளி குறைய -
காற்று புக - வழியின்றி
திரும்பிச் சென்றது. !!!
மனது தலையிட்டு
போர் நிறுத்தம் அறிவிக்க ;
சிவந்த இதழ்கள்
பற்கள் - எம்மை
காயப்படுத்தின - என
வழக்கு தொடுத்தது. ? !!
யுத்தத்தில் காயம்
சகஜம் - ஆனாலும்
பற்களை எச்சரித்து
நீதிபதி -
வழக்கை தள்ளுபடி
செய்தார் !!! ?
வழக்கிலிருந்து
விடுதலையான - பற்கள்
புன்முறுவல் பூக்க !!! ?
இதழ்கள் சுழித்து
எதிர்ப்பைக் காட்ட ?
தலை - கிறக்கத்தால்
தோளில் தஞ்சம் புக !!!
அவனும் அவளும்
இயல்பு நிலைக்கு வர !!!
நா மட்டும் -
இதமாய் வருடியது
காயம் பட்ட உதடுகளை !!!

