யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை

யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
வெண்பரப்பில்
யாரோ அச்சு பாதையை
போட்டு விட்டு
சென்றிருக்கிறார்கள்
ஆனால்..!
அவைகள் நிறைய
இடைவெளிகளாய்
இருந்தன

என்னிடம் இருந்த
ஞாபக கவிதை
பொட்டலத்தை
பிரித்து
அதில் இருந்த
வார்த்தை முத்துக்களை
அங்கும் இங்குமாய்
இடைவெளிகளில்
நிரப்பியபின்

அழகிய வாக்கியங்களாய்
அழகான அர்த்தங்களுடன்
இரசிக்கும் கவிதையாக
மாறித்தான் போய்விட்டது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Feb-24, 11:04 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 86

மேலே