உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்

உள்ளத்தில் ஓவியமாயுனை தீட்டும்போது ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகிவருகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் சிந்திக்காதபோது மௌனமாய்ச் சிரிக்கிறாய்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டினால் ஒளிவெள்ளமாய் பாய்கிறாய்
உள்ளத்தில் கவிதையாய் நினைத்தால் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராய்யுனை உருவகித்தால் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாகவும் நினைக்காவிடின் மௌனமாய்ச் சிரிக்கிறாய்

----இயல்பு வரிகளில் இரண்டு வடிவம்

உள்ளத்தில் ஓவியமாய் தீட்டிடின் ஒளிபோலும் பாய்கின்றாய்
உள்ளத்தில் கவிதையாக நினைத்திடின் பாநதியாய் பெருகுகிறாய்
உள்ளத்தில் மலராக நினைத்திடின் செந்தேனைச் சிந்துகிறாய்
உள்ளத்தில் எதுவாயும் எண்ணிலேன் மௌனமாகச் சிரிக்கின்றாய்

--காய் காய் விளம் காய் காய் என்ற ஒரே வாய்ப்பாட்டமைதிக்கு உட்படுத்தப்பட்ட
ஒரே அடி எதுகை ஐஞ்சீர் நெடிலையிலான கலித்துறை எனும் யாப்பு வடிவில்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-24, 3:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே