அவள் ஒரு ரகசியம்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*அவள் ஒரு ரகசியம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

என்னவளே...!
பெயர் வைக்காத
பூ தான்
உன் புன்னகையோ....?

இனிப்பில்
இடம் பெறாததுதான்
உன் இதழ்களோ....?

தென்றல் உருவாகுவது
உன் முந்தாணையிலோ...?

முக்கனி உருவானது
உன் முத்தத்திலோ....?

அன்னம் நடைக்கற்றது
உன்னிடம் தானோ ?

அழகிய நிலா
ஒளி பெற்றது
உன் முகத்ததிலோ ?

சிலைகள் என்பதெல்லாம்
உன்னை
படைப்பதற்காகப் பார்த்த ஒத்திகைகளோ ?

சித்திரம் என்பதெல்லாம்
உன்னை உருவாக்க
வரைந்த மாதிரிப் படங்களோ ?

கவிதை என்பது
உன்னை வர்ணித்து எழுத
கொண்டு வந்த
ஒரு கலையோ ?

காவியம் என்பதெல்லாம்
உன்னை சிறப்பிக்க
தொடுத்த பா மாலையோ ?

புரியாத புதிர் தான்
உன் அழகின் ரகசியமோ ?
நீதான்
படைப்பின் அதிசயமோ ?

*கவிதை ரசிகன்*


💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-Feb-24, 8:44 pm)
Tanglish : aval oru ragasiyam
பார்வை : 132

மேலே