கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 7 பா 31 32 33 34 35 36

கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 7 பா 31 32 33 34 35 36

31 .
குருகுலத் தோன்றலேயா கத்தெஞ் சுவதை
அருந்துவான் நித்திய ப்ரம்மத்தில் ஒன்றுவான்
இவ்வுலகு இல்லையா கம்செய்யா தோனுக்கு
அவ்வுலகு பின்கிட்டு மோ

32 .
மறையின்கண் இவ்வகை யாகங்கள் எல்லாம்
நிறையவே சொல்லப்பட் டுள்ளதால் நீயும்
அறிவா யவைகருமத் தில்பிறந்த தென்று
அறிந்து விடுதலை காண்

33 .
பொருள்கொண்டு செய்திடும் யாகத் தினினும்
இருள்நீக்கும் ஞானவேள்வி சாலநன் றாமாம்
கருமம் அனைத்துமே முற்றும் இடம்தான்
அருஞ்ஞானம் என்று அறி

34 .
ஞானியர் தாள்பணிந்தும் கேட்டுத் தெளிந்தும்நீ
ஞானியர் கட்கு பணிவிடை யும்செய்தால்
ஞானம்போ திப்பார் உனக்கு

35 .
யாதறியின் இம்மோகம் தன்னை அடையாயோ
மீதமின்றி எவ்வுயி ரையுமென்னில் உன்னில்நீ
கண்டிடும் பெற்றியைப் பெற்றிடுவாய் ஞானத்தால்
கண்டுதெளி வாய்காண்டீ பா

36 .
எவ்வகை பாவங்கள் செய்திருப்போர் ஆனாலும்
எவ்வகை பாவம் அனைத்துமே செய்ய்திடினும்
அப்பாவத் தைநீ கடக்க உதவிடும்
தெப்பம்ஞா னம்மட்டு மே

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-24, 4:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே