நவராத்திரி

நவராத்திரி

முப்பெரும் தேவியரை பக்தியோடு வேண்டிதொழுதிட
மூன்று மூன்று நாட்கள் வரிசை வைத்து ஒன்பது இரவுகள்
சக்திகளை போற்றி புகழ்ந்திட வீட்டில் அலங்காரம் செய்து
குவலத்தோர் படிகள் அமைத்து பொம்மை கொலு வைத்து
புத்தாடை உடுத்தி அக்கம் பக்கத்தோரை அழைத்து இருத்தி அகிலமாளும் ஆதி சக்தியை பாமாலையும் பூமாலையும் பூட்டி
மங்கையரை அன்னையாக பாவித்து மஞ்சள் குங்குமம் அளித்து
அன்னையவள் சக்தி அனைத்தையும் திரட்டி அரக்கனை அழித்திட
மகிஷாசுரனை வென்று ஜெயம் கொண்ட நாள் விஜய தசமி என
பத்தாவது நாள் இதனை கொண்டாடி எதிலும் வெற்றி நிறையுமென
எந்த ஒரு புதிய ஆரம்பத்தையும் இந்நாளில் தொடங்கி வைத்து
குவலயம் கொண்டாடும் ஒன்பது நாட்களை நவராத்திரி என அறிவோம் .

எழுதியவர் : கே என் ராம் (29-Sep-24, 7:33 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 6

மேலே